Thursday, September 29, 2016

How Lanka

இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும்

டில்லி: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க ஐ.நா., தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாக்., கட்டுப்பாட்டு எல்லையை தாண்டி பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா ‛‛ சர்ஜிக்கல் ஸ்டிரைக்'' நடத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியானவுடன் அமெரிக்க ஐ.நா., தூதர் சூசன் ரைஸ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேசினார் அப்பொழுது பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும், இந்தியாவின் இந்த செயல் ஐ.நா.,வின் தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கைக்கு மேலும் வலு சேர்க்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து கருத்து கூறிய அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில் ‛‛ யூரியில் நடந்த தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது, தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் இந்தியாவின் கரங்களுக்கு அமெரிக்கா வலுசேர்க்கும், இரு நாடுகளும் தங்களது தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்தி கொள்ள வேண்டும், அதன் மூலம் தேவையில்லாத மீரட்டல் மற்றும் பதற்றத்தை தவிர்க்க முடியும்'' என தெரிவித்துள்ளார்.