உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இந்தியாவால் இலங்கையில் மேற்கொள்ளப்படக்கூடிய வர்த்தக முதலீட்டு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று கொழும்பை வந்தடைந்த இந்திய வெளியுறவு செயலாளர் உள்ளிட்ட குழுவினர், இலங்கையின் அரச உயர்மட்டத்தினர் மற்றும் வர்த்தக முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளனர்.
சீனாவுக்கு நிகராக இலங்கையில் இந்தியாவின் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பதே ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.