Tuesday, November 1, 2016

How Lanka

கல்லறை சுரங்கத்தில் 60 லட்சம் எலும்புக்கூடுகளை கடந்து பெண் சாதனை



பிரான்ஸ் நாட்டில் உள்ள நிலத்தடி கல்லறைகளில் புதைக்கப்பட்ட சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான எலும்புக்கூடுகளை கடந்து இளம்பெண் ஒருவர் அபார சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் உலகில் உள்ள சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த பாரீஸ் நகர் அமைந்துள்ள நிலத்திற்கு கீழ் சுமார் 150 மீற்றர் ஆழத்தில் உலகிலேயே மிக நீளமான கல்லறை அமைந்துள்ளது ஒன்றும் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இக்கல்லறைகளில் சுமார் 60 லட்சத்திற்கும் மேலான சடலங்கள் புதைக்கப்பட்டு தற்போது எலும்புக்கூடாக கிடக்கின்றன


இந்த நீளமான நிலத்தடி கல்லறையை இதுவரை யாரும் தனியாக கடக்கவில்லை. ஆனால், அமெரிக்காவை சேர்ந்த Alison Teal(30) என்ற பெண் இதனை முறியடித்து சாதனை படைத்துள்ளார். ஆலிசன்னின் தந்தை ஒரு இயற்கை ஆர்வலர் என்பதால், அவருடன் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆலிசன் பயணமாகி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்நிலையில், பாரீஸில் உள்ள நிலத்தடி கல்லறையை நீந்தி கடக்க வேண்டும் என்ற திட்டமிட்ட அவர் தனது குழுவுடன் கடந்த அக்டோபர் 13-ம் திகதி கல்லறையில் இறங்கி நீந்தியுள்ளார்.


வழிமுழுவதும் தண்ணீர் ஓட்டம், எலும்புக்கூடுகளின் குவியல், ஓக்ஸிஜன் குறைந்த வெற்றிடம் என பல மிரட்டல் தரும் அனுபவங்களை சந்தித்து தனது சாதனையை வெற்றிகரமாக முடித்துள்ளார். இச்சாதனை குறித்து ஆலிசன் பேசியபோது, ‘ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த த்ரில்லான அனுபவமாக இப்பயணம் அமைந்துள்ளது. பல இடங்களில் ஓக்ஸிஜன் இல்லாமல் போராடினேன்.

எனினும், நம்பிக்கையை கைவிடாமல் கல்லறை சுரங்கத்தை கடந்து சாதனை செய்துள்ளது பெருமையாக உள்ளது’ என உற்சாகமாக கூறியுள்ளார்.