Sunday, December 25, 2016

How Lanka

கண்டுபிடிக்கபட்டது காமா கதிர்களை வெளியிடும் நட்சத்திரம்


பால்வெளி அண்ட பகுதியில் உள்ள விண்மீன் கூட்டங்களில் ஒரு நட்சத்திரம் காமா கதிர்களை (Gamma ray) முதன்முறையாக வெளியிடுவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் பெர்மி காமா கதிர் ஸ்பேஸ் டெலஸ்கோப் நடத்திய ஆய்வில் நட்சத்திரம் ஒன்று காமா கதிர்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காமா கதிர்களுக்கு LMC P3 எனப் பெயரிட்டுள்ளனர் மேலும் கதிர்களை வெளியிடும் நட்சத்திரம் பூமியிலிருந்து 163000 ஒளியாண்டு தூரத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

வட்ட வடிவில் அதிக ஆற்றல் கொண்ட ஒளியினை இந்த நட்சத்திரங்கள் வெளியிடுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காமா கதிர்களை வெளியிடுவதால் இது நியூட்ரான் நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த நியூட்ரான் நட்சத்திரம் பூமியை வட்டமிட்டு வருகிறது. LMC ஐயும் P3 நட்சத்திரத்தின் மேற்பரப்பில் 60,000 டிகிரி பரன்ஹீட் வெப்பத்தை உமிழ்வதாக நாசா தெரிவித்துள்ளது