Monday, December 12, 2016

How Lanka

டெங்கு நோயை கட்டுப்படுத்த முப்படையினர் களம் இறக்கம்



இவ்வாண்டில் மாத்திரம் டெங்கு நோயால் 47900 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு டெங்கு நோயை கட்டுப்படுத்த முப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு , கம்பஹா , களுத்துறை , காலி , யாழ்ப்பாணம் , இரத்தினபுரி , குருநாகல் , புத்தளம் , மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 இதனை முற்றாக ஒழிப்பதற்காக இன்று திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளது. 
 டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆராயும் கூட்டமொன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த தேசிய வேலைத்திட்டம் குறித்து தீர்மானிக்கப்பட்டது.
முப்படையினர், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினை தேவையான வகையில் பயன்படுத்தி நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டதை நடைமுறைப்படுத்த இதன் போது தீர்மானிக்கப்பட்டது. 
இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் கேட்டுக் கொண்டார்.