Monday, December 26, 2016

How Lanka

அப்பிள் Smart Watch ற்கு போட்டியாக களமிறங்கும் Google இன் Smart Watch

புத்தாண்டு வருவதை தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் அதன் பிரேத்தியேக புதிய படைப்புகளை வெளியிட்டுவருகிறது.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் அன்ட்ரொய்ட் தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
அன்ட்ரொய்ட் ஸ்மாட்போன்களை தொடர்ந்து அன்ட்ரொய்ட் இயங்குதளத்தில் இயங்ககூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த கைக்கடிகாரம் தொடு திரை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, 2017 ஆம் ஆண்டு மார்ச் மதத்தில் இந்த வகை கைகடிகாரங்கள் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் கைக்கடிகாரம் அன்ட்ரொய்ட் 2.0 தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன தயாரிப்பாளர் செப் ஜாங் தெரிவித்துள்ளார்.
இந்த கைக்கடிகாரத்தில் நேரம் பார்ப்பதுடன் கூகுள் தேடுப்பொறி தளத்தை இதில் பயன்படுத்த முடியும். மேலும் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய இயலும், மிக சிறிய தொடு திரை அமைந்துள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் குறிப்புகளை கூட சேமித்து வைக்க இயலும்.
கூகுளின் அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்போன் மற்றும் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அன்ட்ரொய்ட் கைக்கடிகாரத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.