Tuesday, January 10, 2017

How Lanka

மொரகாகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு


மொரகாகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படப்டுள்ளது.

இந்த நீர் விநியோகத் திட்டத்தினூடாக வட மத்திய மாகாணத்திற்கும் நீரை கொண்டு செல்லும் கால்வாய்க்கான வேலைத்திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு புதிய காணியை வழங்குவதற்கான உறுதிப்பத்திரமும் இன்று வழங்கிவைக்கப்படவுள்ளது.