Sunday, January 22, 2017

How Lanka

கால வரையறையின்றி மூடப்பட்டது கிழக்கு பல்கலைக்கழகம்


கிழக்கு பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. விடுதி வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.




பல்கலைக்கழக பேரவையில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட கூட்டத்தில் அனைத்து பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி. கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியில் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர்.குறித்த மாணவர்களையும் போராட்டத்தைக் கைவிட்டு தமது நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி. கே.ஈ. கருணாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.