தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக இன்று ஆரம்பமாகியது. ஈழவள நாட்டின் வட புலத்தில் யாழ்ப்பாணம் நல்லை நகரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் நல்லூர்க் கந்தனின் ஆலயம் யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொன்மையான ஆலயமாகும். இன்று ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் எதிர்வரும் 20.08.2017 அன்று இரதோற்சவம் இடம்பெறவுள்ளது.
நாள் ஒரு அழகு பெறும் நல்லைக் கந்தன் ஒவ்வொரு திருவிழாவிலும் ஒவ்வொரு அழகோடு வலம் வந்து பக்தர்களை மகிழ்விப்பார். இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டும் வரம் வழங்கும் நல்லூர்க் கந்தனிடத்தில் அருளாசி பெற்று மகிழ்ந்தனர்.