Sunday, July 30, 2017

How Lanka

இழஞ்­செ­ழி­யனே கொலை இலக்கு - வடக்கு ஆளுநர் குரே


யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­யைக் கொலை செய்­யும் திட்­டத்­து­ட­னேயே அவர் மீது துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது என்று வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார்.

ஜீ.சீ.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சை­யில் கடந்த வரு­டம் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 9ஏ பெறு­பேறு பெற்ற மாண­வர்­க­ளக் கௌர­விக்­கும் நிகழ்வு யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. யாழ்ப்­பா­ணப் பிராந்­திய இரா­ணு­வத்­தி­னர் நிகழ்வை ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர். அதில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் ரெஜி­னோல்ட் குரே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நல்­லூ­ரில் கடந்த 22 ஆம் திகதி நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் நீதி­பதி இழஞ்­செ­ழி­யனே இலக்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார். அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரான சிங்­கள பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரே தனது உயி­ரைக் கொடுத்து நீதி­ப­தியை காப்­பாற்­றி­யுள்­ளார்.

துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி­ழந்த தனது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரான பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரின் குடும்­பத்­தி­ன­ரைக் கண்­ட­தும் அவர்­க­ளது கால்­க­ளில் விழுந்து அழு­தமை மற்­றும் மெய்ப் பாது­கா­வ­ல­ரின் பிள்­ளை­க­ளைத் தத்­தெ­டுத்­தமை எல்­லா­வற்­றை­யும் தொலைக்­காட்சி ஊடா­கப் பார்த்­தேன். நான் மட்­டு­மல்ல தென்­னி­லங்கை மக்­கள் அனை­வ­ரும் அத­னைப் பார்த்து இப்­ப­டி­யும் தமிழ் மனி­தர்­கள் இருக்­கின்­ற­னரா? என்று வியப்­ப­டை­கின்­ற­னர். இது நல்­லி­ணக்­கத்­துக்கு அடை­யா­ளம்.



யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னின் உயி­ரைக் காப்­பாற்ற சிங்­கள பொலிஸ் பாது­கா­வ­லரே தனது உயிரை தியா­கம் செய்­துள்­ளார். இன,மத,மொழி பேதம் இல்­லா­மல் அந்­தச் சம­யத்­தில் அந்த மெய்ப் பாது­கா­வ­லர் உயிரை தியா­கம் செய்­துள்­ளார். அவ­ருக்கு மட்­டு­மல்ல தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, சுமந்­தி­ரன், ஈ.சர­வ­ண­ப­வன் மற்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உள்­ளிட்ட பல­ருக்­கும் சிங்­கள பொலி­ஸாரே பாது­காப்பு வழங்­கு­கின்­ற­னர். அவர்­க­ளு­டைய உயிர்­க­ளைத் தமிழ் பொலி­ஸார் காப்­பாற்­ற­வில்லை.

கல்விஇந்த உல­கத்­தில் தங்­கத்தை விடப் பெறு­ம­தி­யா­னது கல்வி. தங்­கத்­தைத் திரு­டி­னா­லும் கல்­வியை யாரா­லும் திருட முடி­யாது. ஆகவே அனை­வ­ரும் பிள்­ளை­க­ளுக்­குச் சிறந்த கல்­வி­யைப் புகட்­டுங்­கள்.

நாட்­டின் விடு­த­லைக்­கா­கப் போரா­டு­வ­து­தான் இரா­ணு­வத்­தி­ன­ரின் கடமை. எமது நாட்­டில் போர்க் காலத்­தில் இரா­ணு­வத்­தி­ன­ரின் உயிர்­க­ளும் இரத்­த­மும் இந்த மண்­ணுக்­காக அர்ப்­ப­ணிக்­கப்­பட்­டி­ருந்­தது. உள்­நாட்­டுப் போர் முடிந்து விட்­ட­தால் அவர்­க­ளுக்கு ஒரு வேலை­யும் இல்லை.அதற்­காக அவர்­க­ளைச் சும்மா இருக்க விடக்­கூ­டாது. இந்த நாட்­டின் சக்­திக்கு
உத­வி­யாக இருக்க வேண்­டும் என்­று­தான் இவ்­வா­றான பணி­க­ளைச் செய்­கின்­ற­னர்.

இந்த நாட்­டில் உள்ள பிள்­ளை­கள் நன்கு படித்து இங்­கேயே சேவை செய்ய வேண்­டும். இந்த நாட்­டில் பல முக்­கிய பத­வி­க­ளில் ஏரா­ள­மான தமிழ் அதி­கா­ரி­கள் கட­மை­யாற்­று­கின்­ற­னர். ஆகவே உங்­கள் கல்வி எமது நாட்­டுக்கே திரும்­பப் பயன்­ப­ட­வேண்­டும்- என்­றார்.

இந்த நிகழ்­வில் இலங்கை இரா­ணு­வத்­த­ள­பதி மகேஷ் சேன­நா­யக்க, வடக்கு மாகாண ஆளு­ந­ரின் செய­லா­ளர் இளங்­கோ­வன், யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணு­வக் கட்­ட­ளைத் தள­பதி, பாட­சாலை அதி­பர்­கள், மாண­வர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.