கதிராமங்கலம் கிராம மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த வைகோ மேடையில் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டின் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராகவும், கடந்த 30ம் திகதி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் 10-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
கிராம மக்களை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.
கிராம மக்களைச் சந்தித்து நேரில் ஆதரவு தெரிவித்ததுடன் பேரணியாக நடந்து சென்றனர்.பின்னர், அரசியல் கட்சி தலைவர்கள் பேச மேடை அமைக்கப்பட்டது. மேடையில் பேசுவதற்காக வைகோ வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
சில நொடிகளிலேயே சுதாரித்து மீண்டும் எழுந்து பேசத் தொடங்கிய வைகோ பேசி முடிப்பதற்கு முன்னர் மீண்டும் தள்ளாடினார்.
இதையடுத்து மதிமுக தொண்டர்கள் அவரை தாங்கிப்பிடித்து அமர வைத்தனர். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் தனக்கு சர்க்கரை வியாதி உள்ளதால் மயங்கி விழுந்ததாக வைகோ கூறியுள்ளார்.