Tuesday, July 4, 2017

How Lanka

கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­கம்­மீது தாக்­கு­தல் மேற்­கொள்­வ­தற்கு ஐ.எஸ். அமைப்பு திட்டம் தீட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது

இலங்­கை­யி­லுள்ள அனைத்து வானூர்தி நிலை­யங்­க­ளும் பாது­காப்­பாக உள்­ள­தென இலங்கை விமா­னப்­படை தெரி­வித்­துள்­ளது.
வானூர்தி ஓடு­பா­தை­கள் உள்ள இடங்­க­ளில் கடு­மை­யான பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக விமா­ னப்­படை ஊட­கப் பேச்­சா­ளர் கிஹான் சென­வி­ரத்ன தெரி­வித்­துள்­ளார்.
கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­ கம்­மீது தாக்­கு­தல் மேற்­கொள்­வ­தற்கு ஐ.எஸ். அமைப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தாக வெளி­யா­கி­யுள்ள செய்­தி­கள் தொடர்­பில் அவ­ரி­டம் வின­வி­ய­போ­ததே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள் ­ளார்.
இரத்­ம­லானை வானூர்தி நிலை­யத்­தில் விமா­னம் ஒன்­றைக் கடத்தி அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தைத் தாக்­கு­வ­தற்­காக ஐ.எஸ். தீவி­ர­வா­தி­கள் ஆயத்­த­மா­கின்­ற­னர் என ஊடங்­க­ளில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தன.
இந்­தத் தக­வல் ஊட­கங்­க­ளில் மாத்­தி­ரமே வெளி­யா­கி­யி­ருந்­தன என விமா­னப்­படை ஊட­கப் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டுள் ­ளார்.


இந்த அறிக்கை தொடர்­பில் இன்­ன­மும் எவ்­வித உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­க­ளும் வெளி­யா­க­வில்லை என அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.
போர்க்­கா­லம் மற்­றும் அதன் பின்­ன­ரும் பாது­காப்பு தொடர்­பில் எவ்­வித குறை­பா­டு­க­ளும் இல்லை என அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.