நிலத்தடியிலுள்ள உலோகங்களை தேடுவதற்காக பயன்படுத்தும் ஸ்கேனர் இயந்திரத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வவுனியாவில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை சோதனையிட்ட போது குறித்த ஸ்கேனர் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட ஸ்கேனர் இயந்திரம் ஜேர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.
தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட இயந்திரம் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலை புலிகளினால் மறைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கங்களை தேடுவதற்காக கடந்த நாட்களில் சிலர் முயற்சித்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஜேர்மன் ஸ்கேனர் இயந்திரத்திற்கு சமமான மாற்று இயந்திரங்கள் மீட்டகப்பட்டமை குறிப்பிடத்தக்கது