Thursday, August 31, 2017

How Lanka

மட்டக்களப்பில் மைத்திரி

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவர் மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதுளை பிரதேசத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்யவுள்ளார்.
 காலை 10 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு - பதுளைவீதி கரடியனாறில் 81.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன் இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம் உட்பட இன்னும் பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையில் ஆறாவது மிகப் பெரிய விவசாய ஆராய்ச்சிப் பயிற்சிப் பண்ணையாக இயங்கிய கரடியனாறு விவசாயப் பண்ணை கடந்த 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சேதமாக்கப்பட்டு பாழடைந்து தூர்ந்து போனது.
கடைசியாக அந்தப் பண்ணையில் சுமார் 4000 தொழிலாளர்கள் பணி புரிந்தனர். 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததுடன் கட்டிட நிர்மாண வேலைகள் 10 மாத காலத்தில் முடிக்கப்பட்டு பயிற்சி நிலையம் இயங்கத் தொடங்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது