Thursday, August 31, 2017

How Lanka

Over Time க்கும் எனி ஆப்பா

இலங்கையில் மேலதிக நேரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.உள்ளக சுற்றறிக்கை மூலம் இந்த தகவல் நேற்று அமைச்சின் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தொழில் அமைச்சின் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க போதுமான பணம் இல்லை. மேலதிக நேரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் இந்த நடவடிக்கை குறித்து ஊழியர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.தேவையற்ற போக்குவரத்தும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா என்பனவற்றுக்கு அதிகளவான பணம் செலவிடப்படுகிறது.
வாரத்திற்கு சுமார் 100 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும் ஊழியர்களின் கொடுப்பனவுகள் முறையற்ற வகையில் குறைக்கப்படுவதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொழில் அமைச்சில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
போர் நடைபெற்ற காலத்தில் கூட இவ்வாறன கொடுப்பனவு குறைப்பு எதுவும் நடக்கவில்லை என அமைச்சின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.