கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர், பரீட்சை
மத்திய நிலைய இருந்த பகுதிகளில் தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுவதைத்
தவிர்க்குமாறு மாணவர்களிடம் கோரப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 4ம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
இதில் மூன்று இலட்சத்து 50,000 பேர் வரை கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, அன்றையதினம் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பரீட்சை மத்திய நிலையங்களில் அல்லது அதற்கு அருகில் தேவையற்ற வகையில் கூடும் பரீட்சார்த்திகளை கைதுசெய்யவும், அவர்களது அனைத்து பாடங்களுக்கான பெறுபேறுகளை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து பரீட்சை மத்திய நிலைய கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.