இலங்கை கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்ததாவது,
"" பாகிஸ்தானுக்கும் நமக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெறவுள்ளது. நாம் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு இன்னும் எதிர்பார்க்கவில்லை. எமக்கு ஏற்கனவே அனுபவமிருப்பதால், பாதுகாப்பு தொடர்பில் நாம் 100 வீதம் திருப்தி அடைய வேண்டும். கிரிக்கெட் வீரர்களைப் பணயம் வைக்க நாம் தயாரில்லை. ""