Wednesday, September 27, 2017

How Lanka

வித்தியா கொலைக்கு நீதி! மரணதண்டனை விதித்து அதிரடி

இன்று நடைபெற்ற வித்தியா கொலை வழக்கின் இறுதி தீர்ப்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்துக்காட்டினார்.தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்பை வாசித்தார்.

இறுதியாக ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பெழுதினார் நீதிபதி இளஞ்செழியன்...
அத்துடன் 30 வருட ஆயுள் தண்டனை, 40000 தொடக்கம் 75000 தண்டப் பணம், 1மில்லியன் ரூபா வித்தியா குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவு...
2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார்
3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்,
4ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்,
5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்,
6ஆம் எதிரி சிவதேவன் துஷாந்தன்,
8ஆம் எதிரி ஜெயதரன் கோகிலன்,
9ஆம் எதிரி மகாலிங்கம் சசிக்குமார் என்போருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தான் மரண தண்டனை நடைமுறையில் இல்லையே!!!


மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ,
02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்
03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்
04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்
05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்
6 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்
08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்
09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.