மாகாண அரச திணைக்களங்களில் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த அலுவலர்களிடம், திறமை அடிப்படையில் அதி சிறப்புத் தரத்திற்கு பதவியுயர்வு வழங்குவதுக்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக் குழுவினால் கோரப்பட்டுள்ளன.
முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 1இல் ஐந்து வருட சேவையை திருப்திகரமாக நிறைவு செய்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
போட்டிப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் நடத்தப்படும்.
எழுத்துப் பரீட்சை, சேவைமூப்பு, அனுபவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்படும். புள்ளிகளின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும்.