இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் ஐந்து முறை பந்துவீச முயன்றும் முடியாமல் திணறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் உலகம் இதுவரை பார்க்காத விடயத்தை பாகிஸ்தான் பவுலர் ரியாஸ் அப்போட்டியில் செய்துள்ளார்.
அதாவது, இலங்கை விளையாடிய 111வது ஓவரின் போது பந்து வீசிய ரியாஸ் ஐந்து முறை ஓடி வந்து பந்துவீச முயன்றும் அவரால் அதை செய்ய இயலவில்லை.
ஐந்து முறையும் ஓடி வந்து பிட்ச் அருகே ரியாஸ் நின்றுவிட்டார், பிறகு ஒருவழியாக ஆறாவது முறை பந்தை ரியாஸ் வீசினார்.
ரியாஸ் மைதானத்தில் திணறியதை பார்த்து பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ஃபாரஸ் அகமதும், பெவிலியனில் உட்கார்ந்திருந்த பயிற்சியாளர் மிக்கி ஆர்தரும் எரிச்சலடைந்தனர்.
ஆர்தர் கோபத்தில் எழுந்து ஓய்வறைக்குள் சென்றுவிட்டார்.
அதிக முறை ஓவர் ஸ்டெப்பிங் செய்து நோ பால் வீசிய வீரர் என்ற சாதனைக்கு ரியாஸ் ஏற்கனவே சொந்தக்காரராக உள்ளது குறிப்பிடத்தக்கது.