முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலம் சற்று முன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் நடுக்கடலில் கடற்படையினர் தேடுதலை மேற்கொண்டிருந்ததுடன், மீனவர்கள் கரையில் வலை போட்டு தேடிக்கொண்டிருந்தனர்.
இதன்போதே இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மணற்குடியிருப்பு கடற்கரைக்கு இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஏழு பேர் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
இதன்போது ஏழு பேரும் குளித்துக் கொண்டிருந்த நிலையில் பெரிய அலையொன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அலையில் சிக்காமல் ஐந்து பேர் தப்பித்துள்ள நிலையில் மற்றைய இரு இளைஞர்களும் அலையில் இழுத்துச் சென்றுள்ளதாக தப்பி வந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மீனவர்களுடன் இணைந்து முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் கடற்படையினரும் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது மற்றைய இளைஞனை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.