Monday, October 2, 2017

How Lanka

கேரத் சுழலில் சிக்கி சுறுண்டது பாக்கிஸ்தான்

கேரத் சுழலில் சிக்கி சுறுண்டது பாக்கிஸ்தான். இலங்கை 21 ரண்களால் திரில் வெற்றி

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்கள் இழப்புக்கு 266 ஓட்டங்கள் எடுத்து 153 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தது


இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.


முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 419 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தினேஷ் சண்டிமால் அபாரமாக விளையாடி 155 ஓட்டங்கள் எடுத்தார்.


இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்கள் எடுத்தது.


இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 266 ஓட்டங்கள் எடுத்திருந்தது
இலங்கை அணியை விட 153 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தது.

இன்றைய இறுதி நாளில் கேரத் சுழலில் சிக்கி 114  ஓட்டங்களுக்கு சுறுண்டது பாக்கிஸ்தான்.