Thursday, October 19, 2017

How Lanka

தென்பகுதி மக்களால் வான்பரப்பில் உணரப்பட்டட ஒலி வேற்றுலகவாசிகளின் விண்கலமா


தென் மாகாணத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு 9 மணியளவில் பாரிய சத்தம் ஒன்றினை உணர முடிந்ததாக மக்கள் அறிவித்திருந்தனர்.

அதனடிப்படையில் அது தொடர்பில்  விசேட செய்தியறிக்கையூடாக மக்களைத் தௌிவுபடுத்தியிருந்தது.

தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளில் இவ்வாறு பாரிய சத்தமொன்றை உணர முடிந்ததாக
நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்களும் உறுதிப்படுத்தியிருந்தனர்.

குறித்த சத்தம் கேட்கப்பட்ட அதேவேளை, கரையோரப் பிரதேசங்களில் ஒளிப்பிழம்புகளையும் அவதானிக்க முடிந்ததாக மக்கள் தெரிவித்திருந்தனர். அது வேற்றுலகவாசிகளின் விண்கலத்தினுடையாத கூட இருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். சமீப காலமாக இலங்கை வான்பரப்பில் அடையாளம் தெரியாத மர்ம விண்கலங்களை கண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அது வான் துகளாக அல்லது விண் கற்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வௌியியல் ஆய்வுப் பிரிவினர் கருத்து தெரிவித்தனர்.