Sunday, October 22, 2017

How Lanka

டோனியை சீண்டிய சவுரவ் கங்குலி - விசயம் இதுதான்


விக்கெட் கீப்பிங் செய்வதில் டோனியை விட சஹா தான் சிறந்தவர் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டியில், இந்திய அணிக்கு தற்போது தோனி, சஹா போன்ற மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்கள் உள்ளனர்.

ஆனாலும், டோனியை விட சஹா தான் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிறந்தவர் ஆவார். டோனி கீப்பராக மட்டுமில்லாமல், ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து கோஹ்லிக்கு ஆலோசனை வழங்கும் சிறந்த ஆலோசகராகவும் திகழ்கிறார்.

அடுத்த உலகக் கிண்ண போட்டிகள் வரை டோனி நீடித்தால் இந்திய அணிக்கு பெரிய பக்கபலமாக இருக்கும்.

இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ராகுல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பது இந்தியாவுக்கு கூடுதல் பலம் என கூறியுள்ளார்.