Sunday, October 8, 2017

How Lanka

மட்டக்களப்பில் சுவரொட்டிகள்


அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! மண்ணையா உண்பது? என்ற கேள்வியுடன் மட்டக்களப்பில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் இன்று மட்டக்களப்பில் முன்னிலை சேசலிசக் கட்சியால் ஒட்டப்பட்டுள்ளதுடன், அதில் சம்பளத்தைக் கூட்டு என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.


அத்துடன், இந்த சுவரொட்டிகளில் பொருள் விலையும் வரிச்சுமையும், கடன்களும் பில்லுகளும் தாங்க முடியவில்லை. அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இந்த சுவரொட்டிகள் மூலம் அன்றாடம் தொழில் செய்து வாழ்வை நடத்தும் மக்களின் கஷ்டங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடதக்கது.