Friday, November 3, 2017

How Lanka

உலகமெங்கு சில மணி நேரம் முடங்கியது வட்ஸ்அப்


முக்கிய தகவல் தொடர்பு செயலியான வட்ஸ்அப், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒருமணி நேரமாக உலகமெங்கும் இயங்காததால் தகவல் பரிமாற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

முக்கிய தகவல் தொடர்பு செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மணி நேரமாக வட்ஸ்அப் செயலி சரியாக இயங்கவில்லை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்தனர்.


கூகுள் பிளே ஸ்டோரில் வட்ஸ்அப் செயலியை உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் நிலையில், சில மணிநேர இடையூறால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதனையடுத்து, கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வட்ஸ்அப் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.

வாட்ஸ்அப் செயலி ஏற்கனவே பலமுறை கோளாறு ஏற்பட்டாலும், அதிக நேரம் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். முன்னதாக, கூகுள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியின் போலி பதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த போலி செயலிய பதிவிறக்கம் செய்யும் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனில் தகவல் திருட்டு மற்றும் இதர குறைபாடுகளை ஏற்படுத்த கூடியது என்றும் கூறப்படுகிறது