வெலிக்கடை மாதின்னாகொட வீதியில் நேற்றுஅதிகாலை இடம்பெற்ற விபத்தில் கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் கவலைக்கிடமான நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை மாதின்னாகொட வீதியில் நேற்று (12) அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மாணவர்கள் சென்ற கெப் வாகனம் ராஜகிரிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் சில்வா மாவத்தைக்கு அருகில் நிர்மாணித்துக் கொண்டிருந்த கட்டத்தின் மதில் உடைந்து வீழ்ந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் கெப் வாகனத்தின் பின் ஆசனத்தில் பயணித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.
கெப் வாகனத்திற்கு பின்புறமாக வந்த கார் ஒன்றும் மதிலில் மோதியுள்ளதுடன் அதிலும் இரண்டு மாணவர்கள் இருந்துள்ளனர்.
அனர்த்தம் இடம்பெற்ற போது கெப்பில் 12 பேர் பயணித்துள்ளதுடன், காயமடைந்த 8 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நால்வரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.