நாக்பூரில் இன்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணி 205 ஒட்டங்களுக்கு சுருண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரர்களாக சமரவிக்ரமாவும், கருணரத்னேவும் களமிறங்கினர். சமரவிக்ரமா 13 ஒட்டகளில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, திரிமன்னே களமிறங்கினார். கருணரத்னே, திரிமன்னே ஜோடி மந்தமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. பின்னர், 9 ஒட்டங்களில் திரிமன்னே, அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மேத்யூஸ் 10 ஒட்டங்கள் மட்டுமே எடுத்தார். நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கருணரத்னே 51 ஒட்டங்கள் குவித்த நிலையில் இஷாந்த சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர், இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சண்டிமல் மட்டும் 57 ஒட்டங்கள் சேர்க்க, இலங்கை 79.1 ஒவரில் 205 ஒட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், இஷாந்த சர்மா மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து இந்தியா துடுப்பாட்டத்தினை துவங்கியது.









