Sunday, December 10, 2017

How Lanka

டிசம்பர் 31 கூட்டாட்சி உடைகிறதா....?

இலங்கையின் சமகால அரசியல் மட்டத்தில் உள்ளக மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டம் குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.

இலங்கையில் முதன்முறையாக இரு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ள நிலையில், அதன் ஆயுட்காலம் முடிவை எட்டியுள்ளதாக நம்பப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்தம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதன் ஆயுட்காலத்தை மேலும் 2 வருடங்கள் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் இரண்டு பிரதான கட்சி உறுப்பினர்களும் மீண்டும் இணைந்து செயற்பட மறுக்கும் நிலையில், தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக வெற்றிபெற செய்வதற்காக கடந்த அரசாங்கத்தில் இருந்து விலகி தற்போதைய அரசாங்கத்தில் இணைந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்திற்காக தலையிட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நல்லாட்சி அரசாங்கத்தை நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவின் உறுப்பினர்களின் கருத்தாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் இடையில் தடைப்படும் என சுட்டிக்காட்டப்பட்டு்ளளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிரிவு அதிகரிப்பதுடன். அரசியலமைப்பு செயற்பாடு மேற்கொள்ளும் நடவடிக்கையை உரிய முறையில் மேற்கொள்வதில் சிக்கலில் ஏற்படும் என்பது மேலும் சிலரின் கருத்தாகும்.

இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரு பக்கங்களில் இருந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.