இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் மத்தியில் இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் திடீரென சேற்று நிறத்தில் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஊவா மாகாணத்தில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அதில் இருந்து வரும் பாரிய அளவிலான நீர் சேற்று நிறத்திலேயே கீழே விழுவதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் தூரத்திற்கு இருந்து பார்க்கும் போது தங்க நிறத்தில், தங்க நீர் வடிவதனை போன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.