புதிய முகாமைத்துவத்தின் கீழ் ஶ்ரீலங்கா விமான நிறுவனம் மீள் புனரமைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் முகாமைத்துவத்தின் கீழ் நிறுவனத்தை புனரமைத்தால் எதிர்ப்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போகும் என விமான ஓட்டிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் தனது நண்பரை சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து மத்திய வங்கிக்கு தலைவராக்கியமையால் அது அழிவுக்குள்ளானது.
தற்போது விமான நிறுவனத்தை அழிவுக்கு உள்ளாக்குவதற்கு தனது நண்பனான சரித்த ரக்வத்தவின் மகனான சுரேன் ரக்வத்தவை பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளார்.
நட்பின் நிமித்தமே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான நிறுவனத்தின் புனரமைப்பிற்காக அரச அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி அந்த குழுவின் அறிக்கை நிறைவு செய்யப்படவுள்ளது.
இதேவேளை விமான நிறுவனத்தை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டு செல்வதற்கான எட்டு பிரேரனைகள் அடங்கிய கடிதமொன்றை ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் சுதந்திர சேவையளார் சங்களம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
நட்டம் ஏற்படும் விமான பயணங்களை இயன்றளவு குறைத்து உச்ச பட்ச இலாபத்தை பெற்றுக் கொள்ளுதல் , எதிர்வரும் ஜந்து ஆண்டுகளுக்கான நடைமுறை சாத்தியமிகு திட்டங்களை வகுத்தல் மற்றும் சிவில் விமான சேவை தொடர்பான அறிவு சார் குழுவொன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.