தூய்மையான அரசியலுக்காக தான் அர்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொள்கைகள் மற்றும் நோக்கு இன்று ஜனாதிபதி தலைமையில் வௌியிடப்பட்டது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, தேசிய காங்கிரஸ், நவ சிஹல உருமய மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட 31 கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளன.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்தல் சட்டங்களை பாதுகாத்தல் மற்றும் கட்சியின் வெற்றிக்காக அர்பணிப்புடன் செயற்படுவதாக கட்சியின் பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.