Saturday, December 30, 2017

How Lanka

விபத்துக்களை கட்டுப்படுத்த பொலிஸார் புது வியூகம்

இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்துக்களை குறைப்பதற்கு பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அனுராதபுரம் பொலிஸாரினால் புதிய வழிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் நிஜப் பொலிஸார் கடமையில் நிற்பது போன்ற பொம்மைகளை காட்சிப்படுத்துவதன் மூலம் விபத்துக்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி கடமையில் நிற்பதாக எண்ணும் சாரதிகள், குறைவான வேகத்தில் வாகனத்தை செலுத்துவர். இதன்மூலம் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.