தையல் இயந்திரம் திருத்துனருக்கு அதிகப்படியான கேள்வி நிலவுவதுடன், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான கேள்வி இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.
இயந்திர பொறியியலாளர்கள், கணக்கியல் உதவியாளர்கள் மற்றும் தாதியர் தொழில் துறைகளுக்காக அதிகப்படியான கேள்வி நிலவுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதென்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை நாட்டின் தனியார் துறைகளில் சுமார் 05 மில்லியன் ஊழியர்கள் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், அந்த துறைகளில் உள்ள கேள்விகள் சம்பந்தமாக அந்த ஆய்வில் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.