முதலாவது ரெஸ் போட்டியில் தென்ஆபிரிக்க அணி 72 ஓட்டங்களால் வெற்றி
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 286 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 209 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.
குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார்.
இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 208 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. சுலப இலக்கை விரட்டி வெற்றி பெற்றிடாலம் என துடுப்பெடுத்தாடிய இந்திய அணி பிலான்டரின் வேகத்தில் சிக்கி 138 ஓட்டங்களுள் சுருண்டது.
பிலாண்டர் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதனால் தென்ஆபிரிக்க அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.