Wednesday, January 3, 2018

How Lanka

டி20 போட்டியில் உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் - முன்ரோ


டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் முன்ரோ.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்துடன் இன்று மோதியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குப்தில், முன்ரோ இருவரும் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.


குப்தில் 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், தொடர்ந்து அதிரடி காட்டிய முன்ரோ, 53 பந்துகளில் 104 ஓட்டங்கள் எடுத்தார்.

இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும், 20 ஒவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ஒட்டங்கள் குவித்தது.

கடினமான இலக்கினை துரத்த ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 16.3 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.



நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டும், சோதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

முன்னதாக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களையும் நியூசிலாந்து அணி கைப்பற்றியிருந்தது.

இன்றைய போட்டியில் சதம் விளாசிய முன்ரோவிற்கு, இது 3-வது சதமாகும். இதன்மூலம், டி20 போட்டிகளில் மூன்று சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.