Friday, January 19, 2018

How Lanka

ஊவா மாகாண முதலமைச்சர் தமிழ் அதிபர் ஒருவருக்கு செய்த அராஜகம்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தம்மை முழந்தாளிடவைத்து, மன்னிப்புக்கோர நிர்பந்தித்தார் என பதுளை மாவட்ட மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.


பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில், சம்பந்தப்பட்ட பாடசாலையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே குறித்த அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கடந்த 2 ஆம் திகதி ஊவா மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஊடாக பதுளை மாவட்ட மகளிர் தமிழ் பாடசாலையில், மாணவி ஒருவரை உள்வாங்குமாறு கூறியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஊவா மாகாண முதலமைச்சரின் செயலாளர், முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு தம்மை செல்லுமாறு கூறியதாகவும், அங்கு முதலமைச்சர் தம்மை தகாத வார்த்தைகளால் நிந்தித்ததாகவும், சம்பந்தப்பட்ட அதிபர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், பிரதமரின் கவனத்துக்கு தாம் கொண்டுசென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றுக்கு அழைத்து, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.