அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் கடைசி டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 233 ஒட்டங்களே எடுத்துள்ளது.
சிட்னியில் இன்று தொடங்கிய ஆஷஸ் 5வது டெஸ்ட் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து வீரர்களில், அலெஸ்டர் குக் 39 ஒட்டங்களிலும், ஸ்டோன்மேன் 24 மற்றும் வின்சி 25 ஒட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு களம் கண்ட ஜோ ரூட்டும், மாலனும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் தனது 35வது அரைசதத்தினை கடந்து, 83 ஒட்டங்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 5 ஒட்டங்களிலேயே வெளியேறினார். இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 81.4 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ஒட்டங்கள் எடுத்துள்ளது.
டேவிட் மாலன் 55 ஒட்டங்களுடன் களத்தில் உள்ளார். அவுஸ்திரேலியா தரப்பில், ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.