Tuesday, January 16, 2018

How Lanka

திடீரென வந்த புலிகளால் கலக்கமடைந்த பொலிஸார்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது புலி போன்று ஆடை அணிந்து வந்த மாணவர்களால், வீதிகளில் கடமையிலிருந்து பொலிஸார் பதற்றமடைந்ததாக தெரியவந்துள்ளது.

கல்லூரியில் வழமையான பொங்கல் நிகழ்வுகளுடன், கலாசார நடைபவனியுடன் கூடிய பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

காலை 11.00 மணியளவில் கல்லூரி ஞான வைரவர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் நிகழ்வுகளில் பங்குகொண்டனர்.


அதனைத் தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய நடைபவனி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அடங்கலான இந்துக் கல்லூரி சமூகத்தினரின் வழி அனுப்புதலுடன் கலாசார நடைபவனி யாழ் நகரை வலம் வந்தது. கல்லூரியில் ஆரம்பித்து காங்கேசன்துறை விதியினூடாக வைத்தியசாலை வீதியினை அடைந்து அங்கிருந்து கஸ்தூரியார் வீதியினூடாக கல்லூரி மைதானத்தினை வந்தடைந்தது.



கலாசார நடைபவனியை குதிரை அணி தலமை வகிக்க, யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் ஒயிலாட்ட அணியினர் பின்தொடர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொம்மலாட்ட அணி, பொய் கால் குதிரை அணியினர் மற்றும் மாட்டு வண்டி அணியினர் நடைபவனியை மெருகேற்றினர்.

நடைபவனியில் சிலம்பாட்ட அணியினரின் சிறப்பான ஆற்றுகை நிகழ்வானது பிரதான சந்திகள் நிகழ்த்தப்பட்டு அனைவரினதும் பார்வையினை ஈர்த்துக்கொண்டது.

கலாசார நடைபவனியின் போது மண்பானையில் வைக்கப்பட்ட மோரானது சிரட்டையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தமிழர் தலை நிமிர் கழகம் எனும் நாமத்திற்கு எடுத்துக் காட்டும் வகையில் கலாசார நடைபவனி அனைவரினதும் வரவேற்பினையும் பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.

தொடர்சியாக நடைபவனியில் கலந்துகொண்ட கலைஞர் குழுக்களுக்கான கெளரவிப்பு நிகழ்வானது கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.பொங்கல் திருவிழாவின் இறுதி நிகழ்வாக முட்டி உடைக்கும் நிகழ்வு மற்று கபடிப் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்துவின் பொங்கல் திருவிழா தொடர்சியான வருடங்களில் தமிழர்களின் பாராம்பரிய அம்சங்களை உள்ளடக்கிய பெரும் திருவிழாவாக இடம்பெறும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.