கொழும்பு – புறக்கோட்டை பழைய சோனகத் தெருவிலுள்ள கூலித்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 350- இற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால், பழைய சோனகத் தெருவிலுள்ள மொத்த வியாபார நிலையங்கள் சில மூடப்பட்டுள்ளன.
ஒரு மூட்டையை தூக்குவதற்கு வழங்கப்படும் கூலியை இரண்டு ரூபாவால் அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தற்போது ஒரு மூட்டைக்கான கூலியாக 8 ரூபா மாத்திரமே வழங்கப்படுகிறது. அதனை 10 ரூபாவாக அதிகரிக்குமாறு கூலித்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.