இந்த கடல் ஏரியில் இறால்களின் பெருக்கம் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. இறால்கள் பிடிப்பதற்கு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது இந்த இறால் பிடிப்புப் பருவம் ஆரம்பமாகியுள்ளதால் கூடுதலான மீனவர்கள் இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேச மீனவர்கள் இறால் பிடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.