Friday, January 12, 2018

How Lanka

கடல் மட்ட உயர்வினால் குடாநாடும் ஆனையிறவும் துண்டிக்கப்படும் அபாயம்

பூமி சூடாகி வரு­கி­றது. இத­னால் கடல்­மட்­டம் உயருகின்றது. விரை­வி­லேயே பல நாடு­க­ளின் கரை­யோ­ரப் பகு­தி­க­ளைக் கடல் மூழ்­க­டித்­து­வி­டும் என்று எச்­ச­ரிக்­கப்­ப­டு­கி­றது.

இந்த நிலையில் யாழ்ப்­பா­ணக் குடா­நா­டும் அதன் கழுத்­துப்­ப­கு­தி­யான ஆனை­யி­ய­ற­வும் கூட கடல்­நீர் புகு­வ­தால் பெரு­நி­லப்­ப­ரப்­பில் இருந்து துண்­டிக்­கப்­ப­டும் அபா­யத்­தில் உள்­ளன என அஞ்­சப்­ப­டு­கி­றது.

சூழல் பிரச்­சி­னை­க­ளுக்­கெல்­லாம் மனி­தர்­க­ளது பேரா­சை­கொண்ட நுகர்­வுப் பெரு­வெ­றியே மூல­கா­ர­ணம். தமிழ்த்­தே­சி­யப் பசுமை இயக்­கத்­தின் தலை­வ­ரும் முன்­னாள் விவ­சாய அமைச்­ச­ரு­மான பொ.ஐங்­க­ர­நே­சன் இவ்வாறு தெரி­வித்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் இந்­துக்­கல்­லூ­ரி­யில் இன்­ர­றக்ற் கழ­கத்­தின் ஏற்­பாட்­டில் ‘‘பூமா­தேவி என்ற பேரு­யிரி’’ என்ற தலைப்­பில் பொ.ஐங்­க­ர­நே­சன் மாண­வர் மத்­தி­யில் உரை­யாற்­றி­யி­ருந்­தார். இதன்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.

அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஒரு மாடு தனக்­குத் தேவை­யான புல்லை மாத்­தி­ரமே உண்­கி­றது. தன் வயிற்­றுப்­பசி அடங்­கிய பின்­னர் ஒரு­வாய் புல்­லைத் தன்­னும் அது மேல­தி­க­மாக மேய்­வது கிடை­யாது. ஆனால் ஒரு சிங்­கம் தனக்கு வேண்­டிய உண­வின் அள­வை­விட மிகப் பன் ம­டங்கு எடை­கொண்ட விலங்­கையே வேட்­டை­யா­டு­கி­றது. இந்த வேட்­டைக் குணாம்­சம்­தான் மனி­தர்­க­ளி­ட­மும் உள்­ளது.


கண்­முன்னே தென்­பட்ட விலங்­கு­க­ளை ­யெல்­லாம் வேட்­டை­யா­டிய ஆதி மனி­த­னில் இருந்தே இன்­றைய மனி­தர்­கள் பரி­ண­மித்­த­வர்­கள். இத­னால் ஆதி வேட்­டைக் குணாம்­சங்­கள் மனி­தர்­க­ளது பாரம்­ப­ரி­யத்­தில் பதி­வேற்­றப்­பட்­டுள்­ளது. இத­னால்­தான் இன்­றைய மனி­தர்­கள் இயற்கை வளங்­கள் அத்­த­னை­யை­யும் தமக்கு மட்­டுமே உரித்­தா­ன­தா­கக் கரு­திச் சுரண்­டி­வ­ரு­கி­றார்­கள்.

மனி­தர்­கள் பரி­ணாம வளர்ச்­சி­யின் உச்­சத்­தில் இருக்­கி­றார்­கள். மற்­றைய விலங்குக ­ளி­டம் இல்­லாத பல சிறப்­பி­யல்­பு­கள் மனி­தர்­க­ளி­டம் இருக்­கின்­றன. இத­னால் ஏனைய உயிர்­கள் அனைத்­தை­யும் விடத் தாமே உயர்ந்­த­வர்­கள் என்ற அகங்­கா­ரம் மனி­தர்­க­ளி­டம் இருக்­கி­றது. ஆனால் பூமித்­தா­யின் பார்­வை­யில் புல்­லும் பூண்­டும் மண்­பு­ழுக்­க­ளும் மனி­தர்­க­ளும் ஒன்றே.

மனி­தர்­கள் நுகர்வு வெறி­யைக் குறைத்­தால் மாத்­தி­ரமே பூமி­யும் ஏனைய உயிர்­க­ளும் காப்­பாற்­றப்­ப­டும். இதற்­கான முயற்­சி­யில் முன்­னு­தா­ர­ணர்­க­ளாக மாண­வர்­கள் இருக்­க­ வேண்­டும். ஒரு பொருளை வாங்­கும்­போது அது கட்­டா­யம் தேவை­தானா என்று பல­முறை சிந்­தி­யுங்­கள். வாங்­கிய பின்­னர் அதன் ஆயுட்­கா­லம் முடி­யும்­வரை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்.

எறி­வ­தற்கு முன்­னர் இன்­ன­மும் கொஞ்­ச­நாள்­கள் பயன்­ப­டுத்த முடி­யுமா என்று பாருங்­கள். பயன்­ப­டுத்த இய­லாத நிலை­யில் அவற்றை மீள் சு­ழற்­சிக்கு உட்­ப­டுத்­துங்­கள். உங்­க­ளால் முடி­யும் என்ற நம்­பிக்­கை­யோடு இன்றே இந்த பழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்க ஆரம்­பி­ யுங்­கள். இயற்கை அன்னை கட்­டா­யம் உங்­களை ஆசிர்­வ­திப்­பாள் -– என்­றார்