ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவி நிலையை மறந்து விட்டார் என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மின்வலு எரிசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு தலைவர் என்ற பதவியை மறந்து விட்டு, கட்சித் தலைவராக மட்டும் செயற்படுகின்றார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூன்றாம் அல்லது நான்காம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் கட்சித் தலைவரின் பணிகளை மட்டும் செய்யாது, நாட்டுத் தலைவராக ஜனாதிபதி செயற்பட வேண்டும்.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைத் திரட்டி ஜனாதிபதி புதிய அரசாங்கமொன்றை அமைத்தால் அமைச்சரவைக் கூட்டம் நரகத்திலேயே நடைபெறும், அந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதியே தலைமை தாங்க நேரிடும் என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.