இராஜகிரியவில் அமைக்கப்பட்ட இலங்கையின் மிகவும் நீளமான மற்றும் பெரியதுமான மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் சற்று நேரத்திற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
நீண்ட காலமாக இராஜகிரிய பகுதியில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வை வழங்கும் வகையில் இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் நிறுவனமொன்றுடன் உள்நாட்டு நிறுவனமொன்றும் இணைந்து 2016 ஆம் ஆண்டு இந்த நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தன.
குறித்த மேம்பாலமானது, 4 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்கு வழிப்பாதைகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்,
இந்த மேம்பாலத்திற்கு காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் பெயரை சூட்டுமாறு பலர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் வருட இறுதியில் நிறைவடையவிருந்தது. எனினும் மக்கள் வசதிக்காக துரிதமாக பணிகளை முடிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய 11 மாதங்களில் மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
நான்கு வழித்தடங்களை கொண்ட இந்த மேம்பாலம் 534 மீற்றர் நீளமானதுடன் 180 மீற்றர் நுழைவு பாதையும் அதில் அடங்கும்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொறியியல் தரத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், இரும்புக்கு மேல் கொங்கிரீட் இடப்பட்டு அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மேம்பாலம் என்ற பெறுமையையும் பெற்றுள்ளது.