யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்கத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மை மாணவர்களுக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து கோப்பாய் பொலிஸாருக்குக் கொடுக்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலால் பல்கலைக்கழகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்திய போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் குழு மோதலில் ஈடுபட்டுள்ளதால் பொலிஸார் அங்கு விரைந்தனர்.
எனினும் பொலிஸாரினால் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மாணவர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியமையினால் வீதியால் சென்றவர்கள் பீதியினுடன் சென்றதாகவும், பொலிஸார் தொடர்ந்தும் பரமேஸ்வரா வீதியில் நிலைகொண்டுள்ளனர் என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.