SAITM நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வொன்றை முன்வைத்துள்ளது.
SAITM நிறுவனத்தை இரத்து செய்து அதன் சொத்துக்கள், பொறுப்புகள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை அரச சார்பற்ற, இலாபமீட்டாத, பட்டக்கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (24) மாலை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAITM நிறுவனத்தில் தற்போது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தமது பட்டப்படிபை நிறைவு செய்ததன் பின்னர் நிறுவனம் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அரச சார்பற்ற இலாபமீட்டாத பட்டக்கல்வி நிறுவனமானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.