முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை விஞ்சுவதற்கு இலங்கைக்கு இன்னும் 9 ஓட்டங்களே தேவைப்படுவதுடன், கைவசம் 7 விக்கெட்கள் உள்ளன.
முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் பெற்ற 513 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடும் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 504 ஓட்டங்களை இன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.
சிட்டகொங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில் மூன்றாம் நாளான இன்று ஒரு விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களுடன் இலங்கை முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
தனஞ்சய டி சில்வா 104 ஓட்டங்களுடனும் குசல் மென்டிஸ் 83 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
இவர்கள் இன்று மேலும் 121 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன், இரண்டாம் விக்கெட்டில் மொத்தமாக 308 ஓட்டங்கள் பகிரப்பட்டன. இது 14 வருடங்களின் பின்னர் இலங்கை ஜோடி பதிவு செய்த மூன்றாவது அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.
அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா 175 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 196 ஓட்டங்களையும் பெற்றனர்.
தனது இரண்டாவது டெஸ்ட் அரைச்சதத்தை எட்டிய ரொஷேன் சில்வா 87 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
இன்றைய தினம் 90 ஓவர்கள் வீசப்பட்டதுடன், அதில் இலங்கை 317 ஓட்டங்களைப் பெற பங்களாதேஷ் அணியால் 2 விக்கெட்களை மாத்திரமே வீழ்த்தமுடிந்தது.