Saturday, February 10, 2018

How Lanka

மொத்த வாக்குப்பதிவு வீதம் 60 சதவீதத்திலும் அதிகம்

இலங்கையில் ஒரே நாளில் நாடு முழுவதற்குமான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

நான்கு மணியோடு, அனைத்து வாக்குப் பதிவுகளும் நிறைவடைந்த நிலையில், தற்பொழுது வாக்கெண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர்.

ஒரு கோடியே 57 லட்சத்து 60 ஆயிரத்து 867பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 13 ஆயிரத்து 420 மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஒரு இலட்சத்துக்கு 73 ஆயிரத்து 383 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலில் எந்தவிதமான வன்முறைகளுமின்றி நடந்த முடிந்துள்ளது.

இந்த தேர்தல் நடவடிக்கையின் போது, 65,758 பொலிஸ் அதிகாரிகளுடன் 4,178 சிறப்பு அதிரடிப்படை பொலிஸாரும் 5,953 சிவில் பாதுகாப்புப் படையினரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் 6,823 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் கட்டமாக காலி மாவட்டத்தில் வாக்கெண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.

வடக்கு கிழக்கில் இம்முறை நடைபெற்ற தேர்தல் பெரும் எதிர்பார்வை ஏற்படுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மொத்த வாக்குப்பதிவு வீதம் 60 சதவீதத்திலும் அதிகம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றது. அந்தவகையில், மாத்தளை மாவட்டத்தில் அதிகப்படியான 80 சதவீத வாக்குகள்.

வயது போன நிலையிலும் வாக்குரிமைக்காக சென்ற முதியவர்கள் - கடமையை எண்ணி மெய்சிலிர்கும் தருணம்

நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் பிற்பகல் நான்கு மணிக்கு நிறைவடைந்திருந்தது.

இந்த நிலையில் தேர்தல் வாக்கு பதிவுகளில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மும்முரமாக கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், வயது முதிர்ந்தவர்களும் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு சென்றிருந்தனர்.

இவர்கள் தமது உரிமையை பயன்படுத்தி தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அவர்கள் இந்த வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.