Friday, February 2, 2018

How Lanka

ஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா தொடர்பில் ஆராய ஜனாதிபதி அதிரடி உத்தரவு

ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

ஹெட்டிபொலவில் இன்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் முதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஆட்சியின்போது நிறுவப்பட்ட மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தால் நாட்டுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது.

ஆரம்ப மூலதனத்தை திறைசேரி முழுமையாக முதலிட்டதால் பாரிய நிதி முடக்கமும் ஏற்பட்டிருந்தது.

அத்துடன், விமானக் கொள்வனவு, சொகுசு பேருந்து கொள்வனவு ஆகியவற்றிலும் நிதி மோசடி இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையிலேயே இவை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெறுவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் ஆணைக்குழுவை உருவாக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார்