நாடளாவிய ரீதியில் பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் முயற்சியின் அடுத்த கட்டமாக பொது இடங்களில் பொலித்தீன் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், உலக மரபுரிமை இடங்கள் ஆகியனவற்றில் பொலித்தீன் பாவனை நாளை முதல் தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுதந்திர தினமான நாளை முதல் இந்த தடை அமுலுக்கு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன், பொது இடங்களில் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும்படி மக்களிடமும், பொலித்தீன் பாவனையை ஊக்குவிக்கும் எந்தவித நடவடிக்கைகளிலும் முன்னெடுக்கவேண்டாம் என வர்த்தகர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொலித்தீன் பாவனை தடையை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.